புதுச்சேரியில் இளைஞர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் பாஜக - அதிமுக கூட்டணி..! காங்கிரஸை கலங்கடிக்கும் சர்வே

Published : Mar 16, 2021, 07:17 PM ISTUpdated : Mar 16, 2021, 07:48 PM IST
புதுச்சேரியில் இளைஞர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் பாஜக - அதிமுக கூட்டணி..! காங்கிரஸை கலங்கடிக்கும் சர்வே

சுருக்கம்

புதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இளைஞர்களின் பேராதரவை பெற்றிருப்பது ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. 23-27 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.  

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகிறது பாஜக. 

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்ட நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்து கேட்டது. அந்த கருத்து கணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் பேராதரவு பாஜக கூட்டணிக்கு இருப்பது தெரியவந்துள்ளது. வயது வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில், 18-25 வயதினரில் 56% பேர் பாஜக - அதிமுக கூட்டணிக்கும், 37% பேர் மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வயது பிரிவினர் தான் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள். அவர்களின் ஆதரவு பாஜகவிற்கு அமோகமாக இருப்பதை சர்வே உணர்த்துகிறது.

அதேபோல, 26-35 வயதினரில் 48% பேர் பாஜக கூட்டணிக்கும், 38% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 36-50 வயதினரில் 51% பேர் பாஜக கூட்டணிக்கும், 33% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதரவும் பாஜகவிற்கே உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 53% பேர் பாஜகவிற்கும், 34% பேர் காங்கிரஸுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயின் மூலம் புதுச்சேரியில் இளைஞர்களின் பேராதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியே விட்டது. இந்த சர்வேயை கண்டு காங்கிரஸ் கலங்கித்தான் போயுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!