காங்., - திமுக கூட்டணியை பெண்களுக்கும் பிடிக்கல... ஆண்களுமே மதிக்கல... புதுவையில் நடக்கப் போகும் புதுமை...!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2021, 6:59 PM IST
Highlights

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஆண்களும், பெண்களும் பெரும்பான்மையாக என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணிக்கே வாக்களிக்க அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
 

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஆண்களும், பெண்களும் பெரும்பான்மையாக என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணிக்கே வாக்களிக்க அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புதுவையில் அதிமுக - பாஜக கூட்டணியும் , காங்கிரஸ் - திமுக கூட்டணியும் எதிரெதிராக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் - சி ஃ போர் நிறுவனம் பாண்டிச்சேரியில் நடத்திய  சர்வேயில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 5077 வாக்காளர்களிடம் தனித்தனியாக சர்வே நடத்தப்பட்டது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த சர்வேயில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறுகிறது. 

அதேவேளை, காங்கிரஸ் திமுக கூட்டணி 3 முதல் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மற்றவர்கள் ஓர் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில், அதிமுக என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி 52 சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை பெரும் எனவும், திமுக காங்கிரஸ் கூட்டணி 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று, பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பல்வேறு சாதி சமூகத்தினர் வசிக்கும் புதுச்சேரியில், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும், என்று சர்வேயில் வெளியாகியிருக்கின்றன. அதன்படி வன்னியர் மற்றும் கவுண்டர்கள் வாக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 14 சதவிகிதமே கிடைக்கும். இந்த இரு சமூகத்தினரையும் வாக்குகள் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 67 சதவிகித வாக்குகள் கிடைக்கும் எனக் கூறுகிறது. அதேபோல் மீனவர்கள் அதிகமாக வசிக்கும் அங்கு 40 சதவிகித வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கும், 48 சதவிகித வாக்குகள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

அதிமுக பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக, நாடார்களுக்கு 51 சதவிகித வாக்குகளும், ஓபிசி பிரிவினரின்,  67 சதவிகித வாக்குகளும், முதலியார்களின் 57 சதவிகித வாக்குகளும், முக்குலத்தோரை சேர்ந்தவர்களில் 74 சதவீத வாக்குகளும், ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 68 சதவிகித பார்க்கப்படும், பிராமணருக்கு மற்றும் மேல்தட்டு வகுப்பினர் 76 சதவீத வாக்குகளும், அதிமுக பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேவேளை திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு,  அதிகபட்சமாக தலித்துகள் 62 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 83 சதவிகிதம் பேரும், கிறிஸ்தவர்கள் 57 சதவீதம் பேரும் செட்டியார்கள் 48 சதவீதம் பேரும்  வாக்களிக்க விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர். 

இந்நிலையில், அந்த  சர்வேயில்  பெண்களிடமும், ஆண்களிடமும் யாருக்கு வாக்களிக்க அதிக விருப்பம் உள்ளது என்று சர்வேயில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. பாஜக- அதிமுக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு 53% பேர், 51 சதவீதம் பேர் பெண்களும் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதேவேளை காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு - திமுக கூட்டணிக்கு பெண்கள் 35 சதவிகிதம் பேரும், ஆண்கள் 37 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இரு பாலினத்தவர்களும், விரும்பும் கூட்டணியாக பாஜக  என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

click me!