காங்கிரஸை ‘கை’ கழுவப்போகும் புதுச்சேரி... இலையுடன் தாமரை மலர்வதை உறுதி செய்த அசத்தல் சர்வே...!

By vinoth kumarFirst Published Mar 16, 2021, 6:52 PM IST
Highlights

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மதச்சார்பற்ற கூட்டணி 3 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மதச்சார்பற்ற கூட்டணி 3 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக அடங்கிய மதச்சார்பற்ற கூட்டணிக்கும், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து, காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. மற்றொரு இடத்தில் யாருக்கு வாய்ப்பு என்பது அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, திமுக வேட்பாளர்களில் 12 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், அதிமுகவுக்கு 5 தொகுதிகளும், பாஜகவுக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃ போர் நிறுவனம் இணைந்து சர்வே நடத்தப்பட்டது. அதில்,  என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி மூன்று முதல் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மற்றவர்கள் ஓர் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி 52 சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை பெரும் எனவும், மதச்சார்பற்ற கூட்டணி 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்திக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

click me!