தமிழ் மண்ணில் முதல் முறையாக தாமரை மலர்கிறது...! கிறு கிறுக்க வைக்கும் சர்வே...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 16, 2021, 6:41 PM IST
Highlights

இதனால் தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்ற உறுதியுடன் பாஜகவின் மூத்த தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை களம் புகுந்துள்ளனர். வர உள்ள சட்டமன்ற தேர்தலில்  பாஜக சார்பில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பும் முயற்சி தீயாய் நடந்து வருகிறது. அதற்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் புதுச்சேரியில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைத்தே தீரும் என்பதை திட்டவட்டமாக காட்டி வருகிறது. 

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள சர்வேயின் படி, என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 23 முதல் 27 தொகுதிகள் வரை வெற்றி கிட்டும் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில், அதிமுக என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி 52 சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை பெரும் எனவும், திமுக காங்கிரஸ் கூட்டணி 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்திக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. 

மார்ச் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளிலும், 5,077 பேரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 223 நகர்ப்புறப் பகுதிகளிலும், 113 கிராமப்புறப் பகுதிகளிலும், ரேண்டம் சம்பிளிங் முறையில் நடத்தப்பட்ட சர்வே 95% நம்பகத்தன்மை உடையது என்றும், கிட்டத்தட்ட தேர்தல் முடிவு துள்ளியமாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும்  ஏசியாநெட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 52 சதவீத வாக்குகளையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறும் 36 சதவீத வாக்குகளையும், பிற கட்சிகள் 12 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

click me!