பாஜக-அதிமுக- NR காங் கூட்டணிக்கு 27 தொகுதிகள்.. திமுக-காங் கூட்டணிக்கு டெபாசிட் கூட இல்லை.? அதிர்ச்சி சர்வே.

By Ezhilarasan BabuFirst Published Mar 16, 2021, 6:39 PM IST
Highlights

பாஜக- அதிமுக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகள் முதல் 27 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடும் எனவும், மொத்தத்தில் 52 சதவீத வாக்குகளை இக்கூட்டணி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக-அதிமுக-என்ஆர்காங் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த மெகா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஏசியானெட்நியூஸ் நெட்வொர்க் -சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வேயின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் 95 சதவீதம் இக்கருத்து கணிப்பையொட்டியே வரும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு என்.ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை வெற்றிகரமாக அமைத்துள்ளனர். புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான பணிகளில் அவர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், 

புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏசியானெட்நியூஸ் நெட்வொர்க் -சி ஃபோர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில்  என். ஆர் காங்கிரஸ் அதிமுக, பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

குறிப்பாக- பாஜக- அதிமுக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகள் முதல் 27 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடும் எனவும், மொத்தத்தில் 52 சதவீத வாக்குகளை இக்கூட்டணி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. எதிரணியில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி வெறும் 3 முதல் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது  எனவும், வெறும் 36% வாக்குகளை மட்டுமே பெற வாய்ப்புஇருப்பதாகவும் அதில் தெரியவந்துள்ளது. பிற கட்சி ஒரு இடத்தை பெற வாய்ப்பு இருக்கிறது எனவும் 12 சதவீத வாக்குகள் அவர்கள் பெறக்கூடும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

 மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் அங்குள்ள பெரும்பான்மையின சமூகமான வன்னியர்- கவுண்டர் சமூகத்தினர்  14% பேர் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும், அதே அதிமுக-பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு 61  சதவீதம் பேரும் வாக்களிப்பர் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேபோல் மற்றொரு பெரும்பான்மையின சமூகமான தலித் சமூகத்தில்,  62 சதவீதம் பேர், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் வாக்களிப்பர் எனவும், அதே 21 சதவீதம் தலித் சமூகத்தினர்  அதிமுக-பாஜக என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரியவந்துள்ளது. 

நாடார் சமூகத்தினர் 51% பேரும், முதலியார் சமூகத்தினர் 51% பேரும், தேவர் சமூகத்தினர் 74 சதவீதம் பேரும், ரெட்டியார் சமூகத்தினர் 68 சதவீதம் பேரும், பிராமணர் உள்ளிட்ட முன்னேறிய சமூகத்தினரின் 76 சதவீதம் பேரும் அதிமுக-பாஜக- என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பர் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அதிமுக- பாஜக-என் ஆர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
 

click me!