புதுச்சேரியில் பாஜக- அதிமுக என்ஆர்காங் ஆட்சி..! அதிரவைக்கும் ஏசியாநெட்நியூஸ் - சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வே.

By Ezhilarasan BabuFirst Published Mar 16, 2021, 6:14 PM IST
Highlights

223 நகர்ப்புறப் பகுதிகளிலும், 113 கிராமப்புறப் பகுதிகளிலும் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் உண்மையான விகிதாசார வாக்கு பங்கு மற்றும் தொகுதி அடிப்படையில் இக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி  ஆட்சியை பிடிக்கும் எனவும் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறும் எனவும் ஏசியாநெட் செய்தி நிறுவனத்தின் சி ஃபோர் சர்வேயில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநிலத்தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரியில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக என்ஆர் காங் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று ஏசியாநெட் செய்தி நிறுவனம் சர்வே வெளியிட்டுள்ளது. 

 

இந்த சர்வே மார்ச் 5 முதல் 12 ஆம் தேதிக்கு இடையில் புதுச்சேரியில் உள்ள 30  சட்டமன்ற தொகுதிகளில், சுமார்  5077  பேரிடம்  எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு, எந்த அடிப்படையில் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் பல்வேறு சமூக மக்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.  

 

223 நகர்ப்புறப் பகுதிகளிலும், 113 கிராமப்புறப் பகுதிகளிலும் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் உண்மையான விகிதாசார வாக்கு பங்கு மற்றும் தொகுதி அடிப்படையில் இக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.  ரேண்டம் சம்பிளிங் முறையில் நடத்தப்பட்ட சர்வே 95% நம்பகத்தன்மை உடையது என்றும், கிட்டத்தட்ட தேர்தல் முடிவு துள்ளியமாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும்  ஏசியாநெட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஒருவேளை சர்வேயில் உள்ள  முடிவுகள் 2% அளவிற்கு ஏற்ற இறக்கத்திற்கு வாய்ப்பு இருக்கலாம் எனவும், ஆனால் 95% தேர்தல் முடிவு இதையொத்தே இருக்குமென்றும்  ஏசியாநெட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

click me!