ஏணி வைத்தாலும் எட்டமுடியாத உச்சத்தில் வெற்றி வாய்ப்பு... புதுவையில் அடிச்சு தூக்கும் பாஜக - அதிமுக கூட்டணி..!

Thiraviaraj RM   | Asianet News
Published : Mar 16, 2021, 06:07 PM ISTUpdated : Mar 16, 2021, 06:45 PM IST
ஏணி வைத்தாலும் எட்டமுடியாத உச்சத்தில் வெற்றி வாய்ப்பு... புதுவையில் அடிச்சு தூக்கும் பாஜக - அதிமுக கூட்டணி..!

சுருக்கம்

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த சர்வேயில், என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறுகிறது. 

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த சர்வேயில், என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறுகிறது. அதேவேளை, காங்கிரஸ் திமுக கூட்டணி மூன்று முதல் ஏழு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மற்றவர்கள் ஓர் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதன்மூலம் புதுச்சேரியில், அதிமுக என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி 52 சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை பெரும் எனவும், திமுக காங்கிரஸ் கூட்டணி 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று ஆந்திரம் தோல்வியை சந்திக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. மற்றவர்கள் 12 சதவீத வாக்குகளை பிடிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

 நான்கு மாநிலங்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முப்பதின் சட்டமன்ற தொகுதிகளை உங்களுடைய புதுவையில் அதிமுக பாஜக கூட்டணியும் , காங்கிரஸ் திமுக கூட்டணியும் எதிரெதிராக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் எடுத்து பாண்டிச்சேரி சர்வேயில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் இல்ல 5077 வாக்காளர்களிடம் தனித்தனியாக சர்வே நடத்தப்பட்டது
 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!