தேமுதிகவிற்காக ஒதுங்கி கொண்ட தினகரன்.. அமமுக வேட்பாளர்கள் தொகுதி குறித்து அதிரடி அறிவிப்பு..!

Published : Mar 16, 2021, 05:34 PM IST
தேமுதிகவிற்காக ஒதுங்கி கொண்ட தினகரன்.. அமமுக வேட்பாளர்கள் தொகுதி குறித்து அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட இருந்த அமமுக, தேமுதிகவுக்கு ஒதுக்கியுள்ளது. அதேபோல், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் போட்டியிட இருந்த தேமுதிக அமமுகவுக்கு ஒதுக்கியுள்ளது. 

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட இருந்த அமமுக, தேமுதிகவுக்கு ஒதுக்கியுள்ளது. அதேபோல், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் போட்டியிட இருந்த தேமுதிக அமமுகவுக்கு ஒதுக்கியுள்ளது. 

நீண்ட இழுபறி நிலைக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இந்த கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியானது. இதில்,  கீழ்வேளூர் (தனி) - ஆர்.பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த தொகுதியை தற்போது அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;-  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக்கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் (174) சட்டப்பேரவைத் தொகுதியை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அளித்துவிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த கீழ்வேலூர் (தனி) (164) சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது எனவும் பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தேமுதிக சார்பில் அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக சார்பில் துணைபொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!