‘10 வருடம் கட்டி காத்த தொகுதி போச்சே’... கண்ணீர் விட்டு கதறி அழுத என்.ஆர்.காங்., எம்எல்ஏ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 16, 2021, 03:18 PM IST
‘10 வருடம் கட்டி காத்த தொகுதி போச்சே’... கண்ணீர் விட்டு கதறி அழுத என்.ஆர்.காங்., எம்எல்ஏ...!

சுருக்கம்

10 ஆண்டுகளாக மண்ணாடிபட்டு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடம் திருக்கனுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர். 

அதிமுகவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் முன்பு கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டபடி அழுத தோப்பு வெங்கடாசலத்தை பார்த்து சுற்றி இருந்த ஆதரவாளர்களும் கண்ணீர் விட்டு தேம்பித், தேம்பித் அழ ஆரம்பித்தனர். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவிலும் வைரலானது. 

தற்போது இதேபோல் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கதறி அழுத சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக - அதிமுகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியைப் பெறுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஆர் செல்வம், பாஜக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இடையே போட்டி நிலவியது. இந்நிலையில் அத்தொகுதி நமச்சிவாயத்திற்கு ஒதுக்கியதாக தகவல் வெளியானது. 

10 ஆண்டுகளாக மண்ணாடிபட்டு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தனக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடம் திருக்கனுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த 10 ஆண்டுகளாக என் குடும்பத்தை கூட சரியாக கவனிக்காமல் மக்கள் பணியாற்றினேன்.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமியை கடவுளை விட அதிகமாக நம்பினேன், நான் இன்னும் தலைவரை நம்புகிறேன். 2 நாட்கள் பொறுத்திருக்க சொல்லியுள்ளார். அதன் பிறகு, ஆதரவாளர்கள் கூறும் கருத்துப்படி நடந்து கொள்வேன், என்றார்.என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமியை கடவுளை விட அதிகமாக நம்பினேன என்ற போது திடீரென கதறி அழுதார். இச்சம்பவம் அந்த தொகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!