அரசு பணி உறுதி... அதிமுகவுக்கு வாக்களிக்க தமிழக இளைஞர்கள் முடிவு..!

Published : Mar 16, 2021, 05:17 PM IST
அரசு பணி உறுதி... அதிமுகவுக்கு வாக்களிக்க தமிழக இளைஞர்கள் முடிவு..!

சுருக்கம்

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதியாக வழங்கப்படும் என்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் தங்களின் கனவு நிஜமாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கின்றனர். 

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம், நெசவாளர்கள் நலன், விவசாயிகள் வளம் பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முதல் முறை வாக்காளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வளம் பெற செய்வதற்கான திட்டங்கள் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   18 வயது உடையவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உறுதி என்ற அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கான அறிவிப்புகள்:

* பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடும் வகையில் 

* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்

* கல்லூரி மாணவர்களுக்கு 2GB Data ஆண்டுதோறும் வழங்கப்படும்

* அரசு பள்ளியில் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்

* இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

மாணவர்கள், இளைஞர்கள் என இளம் வயதினரை அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெகுவாக கவர்ந்துள்ளது. இளைஞர்களும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளுக்கு நன்றிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்கள் அ.தி.முகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என்று தெரிய வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!