புதுச்சேரியில் 52% வாக்குகளை அள்ளப்போகும் பாஜக கூட்டணி... கதிகலங்கிப் போன காங்கிரஸ்-திமுக...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 16, 2021, 07:09 PM IST
புதுச்சேரியில் 52% வாக்குகளை அள்ளப்போகும் பாஜக கூட்டணி... கதிகலங்கிப் போன காங்கிரஸ்-திமுக...!

சுருக்கம்

பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் 52 சதவீத வாக்குகளை அள்ளிக் குவிக்கப் போவது உறுதியாகியுள்ளது. 

புதுச்சேரியில் மக்கள் நம்பிக்கையும், பெரும்பான்மையயும் இழந்ததை அடுத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. அங்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,  மக்களின் மனநிலையும் மெல்ல, மெல்ல காங்கிரஸ் கட்சியை கை கழுவும் நிலைக்கு வந்துவிட்டது. காரணம் எவ்வித மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றாமல், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தால் காங்கிரஸ் மீதான நம்பிக்கை, அவநம்பிக்கையாக மாறியுள்ளது. 

ஏற்கனவே பெங்களூரு நிறுவனம் ஒன்று புதுச்சேரி மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பிலும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி ஒன்றிணைந்து தேர்தலை போட்டியிட்டால் 28 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டது. தற்போது ஏசியா நெட் செய்தி நிறுவனம், சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள சர்வேயின் படி,  பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் 52 சதவீத வாக்குகளை அள்ளிக் குவிக்கப் போவது உறுதியாகியுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதி மக்களிடமும் ரேண்டம் சம்பிளிங் முறையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயின் படி, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 36 சதவீத வாக்குகளும், தனித்து களம் காண்பதாக தேர்தலில் இறங்கியுள்ள இதர கட்சிகளுக்கு 12 சதவீத வாக்குகளும் மட்டுமே கிடைக்கும் என திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்காக ஆதரவு அதிகரித்து வருவதால், திமுக - காங்கிரஸ் தலைமை கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?