நாராயணசாமியால் புதுச்சேரி நாசமாய் போச்சு... மக்கள் கொந்தளிப்பை வெளிக்காட்டியதாக பாஜக சாமிநாதன் பாராட்டு..!

By vinoth kumarFirst Published Mar 16, 2021, 7:22 PM IST
Highlights

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மதச்சார்பற்ற கூட்டணி 3 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மதச்சார்பற்ற கூட்டணி 3 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக புதுச்ரேி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில்;- 50 ஆண்டுகளாக புதுச்சேரி எந்த வளர்ச்சியும் இல்லை. 5 ஆண்டுகளில் நாராயணசாமி ஆட்சியில் பொய்யை மட்டுமே பேசி வந்துள்ளார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் முடக்கியுள்ளார். அதேபோல், மாநில அரசின் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவிலேயே ரேசன் கடை முடிய ஒரே மாநிலம் புதுச்சேரி மட்டும் தான். வேலை வாய்ப்பு இல்லை. சாலை வசதியில்லை. ஒட்டுமொத்தமாக 5 ஆண்டில் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமப்பட்டுள்ளனர். இதனுடைய பிரதிபலிப்புதான் அவர்கள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவே நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை.

புதுச்சேரி மாநிலம் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றதற்கு நாராயணசாமி தான் காரணம். மத்திய அரசை பொறுத்த வரையில் பிரதமர் மோடி தேர்தலில் வென்றவுடன் அனைத்து மாநிலங்களையும் தன்னுடைய மாநிலமாக பார்க்கிறார். தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் போது புதுச்சேரியில் மட்டும் எப்படி பிரச்சனை வரும். புதுச்சேரி மாநிலத்தின் பிரச்சனையே நாராயணசாமி தான் என்றார். நாராயணசாமி இன்று தனிநபராக இருக்கிறார் என்றால் கட்சி மற்றும் நிர்வாகியையும் அழித்துள்ளார். குறிப்பாக புதுச்சேரி மாநிலமும் அழிந்துபோனதற்கு தனிநபரான நாராயணசாமி என்று சாமிநாதன்  கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

click me!