கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம்... நாராயணசாமி அதிரடி அறிவிப்பு!!

By Asianet TamilFirst Published Jul 23, 2020, 8:54 PM IST
Highlights

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா, இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 12.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3.37 லட்சம், தமிழகத்தில் 1.86 லட்சம், உத்தரபிரதேசத்தில் 55 ஆயிரம் பேர் என ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
இதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால். புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக நாராயணசாமி கூறுகையில், "கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.9.16 கோடி வந்துள்ளது. கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கு 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

click me!