புதுச்சேரி மருத்துவகல்லூரி சீட் முறைகேடு.!! ஆதாரங்களை அழித்தது யார்? கிரண்பேடி யார் மீது சந்தேகப்படுகிறார்?

Published : Feb 18, 2020, 09:22 PM IST
புதுச்சேரி மருத்துவகல்லூரி சீட் முறைகேடு.!!  ஆதாரங்களை அழித்தது யார்?   கிரண்பேடி யார் மீது சந்தேகப்படுகிறார்?

சுருக்கம்

சென்டாக் அமைப்பு மூலம் மருத்துவக் கல்லூரி தொடர்பான சிபிஐ வழக்கில் இருந்து அரசு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரம் படைத்தவர்களால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

T.Balamurukan
   

சென்டாக் அமைப்பு மூலம் மருத்துவக் கல்லூரி தொடர்பான சிபிஐ வழக்கில் இருந்து அரசு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரம் படைத்தவர்களால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்த பொதுப்பிரிவைச் சேர்ந்த 42 பேரும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளைச் சேர்ந்த 56 பேரும் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று மாணவர்களும், பெற்றோர்களும் துணை ஆளுநர் கிரண்ட்யிடம் புகார் தெரிவித்தார்கள்.அதனடிப்படையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கே சென்றார். இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி சி.பி.ஐ விசாரிக்கும் அளவிற்கு மருத்துவகல்லூரி சீட் விவகாரம் சென்றது. 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி..,

2017ஆம் ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை கூட்டுச்சதி செய்து அபகரிப்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை முக்கிய நடவடிக்கை எடுத்தது. இது சாதாரண போராட்டம் அல்ல.  பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த முறைகேடுகள்.எனவே,  தகுதியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் மாளிகையில் நாங்கள் தலையிட வேண்டியதாயிற்று.மருத்துவக் கல்லூரிகள் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு ஒதுக்கீடு செய்த இடங்களை தர மறுத்து பணம் கொடுப்பவர்களுக்கு சீட் வழங்குகின்றனர் என  ஆளுநர் மாளிகையில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து கலந்தாய்வு நடந்த இடத்துக்கே சென்று ஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

இதனால் ஆளுநர் மாளிகைக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன.  இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.  உரிய வழிமுறைகளுடன் மாணவர் சேர்க்கையை முறையாக நடத்த  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது,  மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தகுதியான மாணவர்களின் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் சட்டத்துக்கு விரோதமாக கல்லூரிகளில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையின் விடாமுயற்சி, தொடர் நடவடிக்கை காரணமாக நல்ல பலன் கிடைத்தது. ஆளுநர் மாளிகை சார்பில் தன்னிச்சையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்மைகள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

பாதிக்கப்பட்ட மாணவர்களும்,  பெற்றோர்களும் தங்கள் உரிமையை பெற ஆளுநர் மாளிகை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.  மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து சிபிஐ விசாரணை அதிகாரிகளிடம் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். கல்லூரிகள்,அதிகாரிகள் மீதான சிபிஐ விசாரணையில் அதிகாரம் படைத்தவர்களால் ஆதாரங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம். அப்போது விசாரணைக்கு உட்பட்ட அதிகாரிகள் இப்போது குற்றவாளிகளாக இல்லாவிட்டாலும் கூட கல்லூரிகளை மேற்பார்வையிட்டவர்கள் யார்?, மாணவர்கள் நேர்மையான இடத்தை பெறமுடியாமல் போனதற்கு யார் காரணம்?, தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து  எப்படி பணம் பறிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்