எடப்பாடி, பன்னீர்செல்வம் வகையறாவை வெளுத்துவாங்கிய பூங்குன்றன்: விஸ்வாசம் இருக்குறா மாதிரி நடிக்கவாது செய்யுங்க

By Vishnu PriyaFirst Published Feb 18, 2020, 6:36 PM IST
Highlights

தேர்தல் நெருங்கும் வேளையில் அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அல்லது கொண்டாடுவது போல நடிக்கவாவது செய்யுங்கள். தொண்டர்கள் உங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களும்தான். 

இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி! என்று வெறும் மாநில கட்சியான அ.தி.மு.க.வை விஸ்வரூபமெடுக்க வைத்த அரசியல் சாணக்கிய பெண்மணிதான் ஜெயலலிதா. அவரின் மறைவால் அ.தி.மு.க. அடைந்திருக்கும் சரிவு அசாதாரணமானது. யலலிதா வாழ்ந்த காலத்தில்,  அக்கட்சியின் மிக மிக முக்கிய நிர்வாகியே கூட அவரிடம் ஒரு வார்த்தை பேசுவதென்பது மிக மிக அரிது. ஜெயலலிதாவே நினைத்தால் மட்டுமே அவரது தரிசனம் இந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கிடைக்கும். ஜெயலலிதாவின் முன்னிலையில் மடங்கி, ஒடுங்கி, சுருண்டு கிடந்த நிர்வாகிகள் இன்று மீசையை முறுக்கிக் கொண்டும், ஜபர்தஸ்து காட்டிக் கொண்டும், வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டும் திரிகிறார்கள்.

 
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பர்ஷனல் உதவியாளராக, அவரது நிழலாக வலம் வந்தவர்தான் பூங்குன்றன். ஜெ., மறைவுக்குப் பின் சமூக வலைதளங்களில் மிக தீவிரமாக இயங்கி வரும் குன்றன், ஜெயலலிதாவின் நினைவுகளில் உருகி, மருகி அடிக்கடி பதிவுகளைப் போடுவார். அதிலும் ஜெ.,யின் பிறந்ததாள், நினைவுநாள் வருகிறதென்றால் பூங்குன்றனின் பதிவுகள் பட்டையை கெளப்பும். அந்த வகையில் ஜெ.,வின் பிறந்தநாள் நெருங்கும் நிலையில், இன்று ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் ‘அம்மா வழிகாட்டுதல் படி நடக்கும் ஆட்சி’ என்று கூறிக்கொண்டு வலம் வரும் ஆட்சியாளர்களான  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தலைமையிலான அமைச்சரவையினரும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் ஜெயலலிதா மீது உண்மை விசுவாசம் மற்றும் பாசத்துடன் இல்லை என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாக சொல்லி, வெளுத்தெடுத்து ஒரு பதிவை போட்டுள்ளார்....‘ஏற்றிவிட்டவரை மறக்காதீர்கள்....’ எனும் தலைப்புடன் வந்துள்ள அந்த பதிவில் பூங்குன்றன் குறிப்பிட்டுள்ள ஹைலைட் பாயிண்டுகளாவன....


*அம்மாவால் வளர்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் இன்று அவரை நினைவில் வைத்துள்ளார்களா? அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடப் போகிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு மட்டும் இல்லை, தொண்டர்களுக்கும்தான். 

*அம்மா இருக்கும் போது அவரது பிறந்தநாளில் கோயில்களில் கழகத்தினர் கூட்டம் களை கட்டும். ஆனால், இப்போது மிக குறைவாகத்தான் கட்சியினர் வருகிறார்கள். ‘அம்மாவிடம் இவர்களெல்லாம் நடிச்சிருக்காங்க சார்’ என்று ஒரு குருக்களே சொல்கிறார்.  அவலம் இது.

*    முடியாமல் முயன்று பெற்றுத் தந்த ஆட்சி இது. ஆட்சியை  கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள் அந்த புனிதவதி. எதிர்க்கட்சியாக உங்களை விட்டுச் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? கற்பனை செய்து பாருங்கள், கலங்கி இருப்பீர்கள். 

*தேர்தல் நெருங்கும் வேளையில் அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அல்லது கொண்டாடுவது போல நடிக்கவாவது செய்யுங்கள். தொண்டர்கள் உங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களும்தான். 

*யார் எப்படி இருந்தால் என்ன, தொண்டர்களே! அவரவர் வீட்டில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துங்கள். தலைவர், தலைவி பாடல்கள் ஒலிக்கட்டும். ...என்று பின்னி எடுத்திருக்கிறார் பூங்குன்றன. அமைதியான மனிதராக பார்க்கப்பட்ட பூங்குன்றனே இவ்வளவு ஆவேசப்படுமளவுக்கு சூழல் மாறியுள்ளது. என்றால் கட்சியின் லட்சணம் எப்படி உள்ளது! ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசத்தை இவர்கள் காட்டாத காரணத்தினால் தொண்டர்களும், மக்களும் அ.தி.மு.க. தலைமை மீது கடுப்பில் உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
 

click me!