கப்பலில் வந்த சீனா பூனை...வண்டலூர் பூங்காவில் வைக்க திட்டம்... அஞ்சத்தேவையில்லை என சுகாதாரத்துறை வேண்டுகோள்...

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2020, 6:01 PM IST
Highlights

  பொம்மைகள் இருந்த கண்டெய்னரில் பூனை இருந்ததால் அது சீனாவில் இருந்துதான் வந்து இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

கப்பலில் வந்த சீன பூனை வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.   இந்த பூனை  சீனாவில் இருந்து வந்ததால் கரோனா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில்   இந்தப் பூனை வண்டலூருக்கு கொண்டு வரப்பட உள்ளதால்   மக்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது .  சீனாவில் ஏற்பட்டுள்ள குரானா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ளது,   இதுவரையில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

 

சீனாவையும் தாண்டி பல்வேறு நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது .  இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விமானநிலையத்தில் இருத்து வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர் .  வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும்  தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.  கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் இதுவரையில் கொரோனா பாதிப்பு இல்லை இந்நிலையில் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் இருந்த பூனையால் மக்கள் கொரோனா வைரஸ் பீதியடைந்துள்ளனர்.  பொம்மைகள் இருந்த கண்டெய்னரில் பூனை இருந்ததால் அது சீனாவில் இருந்துதான் வந்து இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது . 

இந்நிலையில் துறைமுக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவ்வதிகாரிகள் கப்பலுக்கு சென்று பூனையை மீட்டு ஆய்வு மேற்கொண்டனர் .  அந்தப் பூனை வேப்பேரியில் உள்ள கால்நடை பராமரிப்பு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .  அதாவது சீன கப்பலில் வந்த பூனை  சீன நாட்டிலிருந்து வரவில்லை எனவும் ,  அது வழியில்  வேறு நாட்டிலிருந்து வந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது .  ஆனாலும் அந்த பூனை மூலம் வைரஸ் தாக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதுகுறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை  அதிகாரி ஒருவர் ,  சீனக் கப்பலிலிருந்த பூனை சீனாவில் இருந்து வரவில்லை.  அந்தப் பூனை பத்திரமாக மீட்டு மருத்துவ பரிசோதனை செய்து வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .  இன்னும் ஓரிரு நாட்களில் இது வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு  கொண்டுசெல்லப்படும்,  இதனால் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பீதியடைய தேவையில்லை என கூறியுள்ளார்.  
 

click me!