தலித்களை அவமானப்படுத்திய சுயமரியாதைக்காரர்களே... முதலில் பி.கே.காலிலிருந்து தலையை எடுங்கள் : ஹெச்.ராஜா..!

Published : Feb 18, 2020, 05:51 PM ISTUpdated : Feb 18, 2020, 05:53 PM IST
தலித்களை அவமானப்படுத்திய சுயமரியாதைக்காரர்களே... முதலில் பி.கே.காலிலிருந்து தலையை எடுங்கள் : ஹெச்.ராஜா..!

சுருக்கம்

தலித் மக்களை பிச்சைக்காரர்களாக வர்ணித்ததில் வியப்பில்லை. ஆனால், இவர்களுக்கு சுயமரியாதை இருக்குமானால் பி.கே.பாண்டேயின்(பிகார் ஐயர்) காலிலிருந்து தலையை வெளியே எடுக்கட்டும்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அக்கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, ’திமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தலித்துகள், நீதிபதிகளாக வந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் நீதிபதிகளாக தலித்துகள் இருப்பது திமுக போட்ட பிச்சை. பத்திரிகைகாரனுக்கு வேறு வேலையே இல்லை. கெஜ்ரிவால் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்தினால் அதை இவர்கள் செய்தியாக போடவில்லை. நரேந்திரமோடி பயன்படுத்தினான். அதையும் போடவில்லை. யார் யாரோ அவரை பயன்படுத்தினார்கள்.

 அதுபற்றி எல்லாம் எழுதவில்லை. அவர் தமிழ்நாட்டில் திமுகவுக்காக வந்தவுடன் வயிற்று எரிச்சல் காரணமாக அது பற்றியே பேசுகிறார்கள். அதுபற்றியே விவாதிக்கிறார்கள். இந்த டிவிகாரனுங்க இருக்கானுங்க பாருங்க, அவங்கள மாதிரி உலகத்திலேயே அயோக்கியர்கள் வேறு எவரும் கிடையாது. பம்பாயில் இருக்கிற ரெட் லைட் ஏரியா மாதிரி, டிவிகளை நடத்துகிறார்கள். காசு வருகிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் கிளப்புறாங்க. தளபதி கோயிலுக்கு போனாரா? அவரது வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்கு போனார்களா? இது பற்றி விவாதம் நடத்துகிறார்கள். இதுவாடா நாட்டுக்கு முக்கியம்?’’என ஆர்.எஸ்.பாரதி பேசினார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஈ.வெ.ரா தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று கூறியவர். அவரது வளர்ப்பு R(oad) S(ide)பாரதி, தலித் மக்களை பிச்சைக்காரர்களாக வர்ணித்ததில் வியப்பில்லை. ஆனால், இவர்களுக்கு சுயமரியாதை இருக்குமானால் பி.கே.பாண்டேயின்(பிகார் ஐயர்) காலிலிருந்து தலையை வெளியே எடுக்கட்டும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!