”காவி தான் பெரியது”கருப்புகளை மட்டுமே பேசியவர்கள்.. காவி பக்கம் சாய்துள்ளனர்.. ஒரே போடு போட்ட தமிழிசை..

Published : Apr 29, 2022, 01:08 PM IST
”காவி தான் பெரியது”கருப்புகளை மட்டுமே பேசியவர்கள்.. காவி பக்கம் சாய்துள்ளனர்.. ஒரே போடு போட்ட தமிழிசை..

சுருக்கம்

தமிழகத்தில் தான் காவி பெரியது, வலியது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும கறுப்பை மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர்கள், காவியை சற்று காதுக்கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் தான் காவி பெரியது, வலியது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும கறுப்பை மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர்கள், காவியை சற்று காதுக்கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.கோவை பேரூர் தமிழ் கல்லுாரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழசை செளந்திரராஜன், தமிழிடம் இருந்து எங்கெல்லாம் அழைப்பு வருகிறதோ, அங்கே தமிழிசை வருவேன். ஒரு ராமசாமி மட்டும் தமிழுக்கும், பெண்ணுக்கும் சேவை செய்யவில்லை என்றும் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் போல, பல ராமசாமிகள் தமிழுக்கும் பெண்மைக்கும் சேவை செய்துள்ளார் என்று அவர் கூறினார். 

தமிழக அரசு ஆதினங்களை அழைத்து பேசியது மகிழ்ச்சி தான். கறுப்பை மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர்கள், காவியை சற்று காதுக்கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை. அது போல் தமிழ் இல்லாமல் ஆன்மிகம் இல்லை என்றார். தமிழகத்தில் காவி தான் பெரியதும், வலியதும் என்றும் சமய பெரியோர்கள் அணிந்திருக்கும் காவி, தேசிய கொடியில் உள்ள காவியை கூறுவதாகவும் பேசினார்.

ஆன்மிக முன்னேற்றத்தை சேர்ந்தது தான் தமிழ் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றம் என்ற அவர் தமிழக அரசு, மடாதிபதிகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எந்த ஆளுநருக்கும் தனிப்பட்ட கருத்து கிடையாது என்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆளுநர்களை அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும்பேசுவதையும், நடத்துவதையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மசோதக்களை அனுப்ப நேரம் காலம் என்றெல்லாம் கிடையாது என்றும் அது குறித்து அந்தெந்த ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் அவர் பேசினார். மாநிலங்களுக்கு ஆளுநர், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் அரசியல் சாயம் இருக்கக்கூடாது என்று தமிழிசை வலியுறுத்தினார். 

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற கருத்து தெரிவித்த நிலையில், அதுக்குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சில நேரங்களில் நீதிமன்றங்களில் கூறுவது, எல்லா ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்பது கிடையாது என்றார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," காவி தான் வலிமையானது என ஒரு ஆளுநர் சொல்லியுள்ளார். காவி ஒரு போதும் வலியானது இல்லை. வெண்மை தான் வலிமையானது. தமிழ்நாட்டில் காவிக்கு என்ன பலம் உள்ளது என்று தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!