
ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவி என்பது அவசியமான ஒன்றுதான் என்றும், ஆளுநர் பதவி இருப்பது நல்லதுதான் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கூறியுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் " ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் அவசியமில்லை" என பேசி வரும் நிலையில் அழகிரியின் கருத்து முரண்பட்டு உள்ளது. அவரின் இந்த கருத்து திமுக, அதன் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என். ராவி பதவியேற்றது முதல் அவருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கூட ஆளுநர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறார். ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் மேலோங்கி வருகிறது. மொத்தத்தில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் பதவியை மாநிலத்திற்கு அவசியமற்ற ஒரு பதவி என்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி ஆளுநர் பதிவு என்பது நல்லது, அவசியமான பதவி எட கருத்து தெரிவித்துள்ளது.
நீட் விலக்கு மசோதா மற்றும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட மசோதாக்களை குடியரசுதலைவருக்க அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின்படி ராஜீவ் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் மட்டுமே நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய கே.எஸ் அழகிரி ஒரே ஒரு அறிக்கை மூலம் அழைப்பு கொடுத்ததற்கே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தமிழகத்தில் படிப்படியாக, உறுதியாக வளர்ந்து வருகிறது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி என்பது ஆளுநர் பதவிக்கு எதிரான கட்சியல்ல, ஆளுநர் பதிவு இருக்கவேண்டும், அதுதான் நல்லது என கருதுகிறோம். ஆனால் ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும், ரவி ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம், ரவி என்பவர் காவல்துறையை பின்னணியாக கொண்டவர். அவர் பதற்றம் மிக்க எல்லைப்புற மாநிலங்களுக்கு தகுதியானவர். தமிழகம் போன்ற ஒரு மாநிலத்திற்கு கற்றறிந்தவர்களை ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்.
முன்பிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதைவிட கெட்டிக்காரர். குடியரசுத் தலைவருக்கு முறையாக மசோதாக்களை அனுப்பினார். ஆனால் ரவி மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வையும் மதிக்கத் தெரியாதவர். அன்று புதுச்சேரியில் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் மூலம் தொல்லை கொடுத்து மாநில அரசு இடைஞ்சல் செய்தது. ஆனால் இப்போது அரசியலுக்கு அப்பாற்பட்டு சித்தாந்த எதிரியாக பாஜக முதல்வர் ஸ்டாலினை பார்க்கிறது. வலிமையான தேசியக் கட்சியான காங்கிரசும், பல்வேறு மாநில முதல்வர்களும் ஸ்டாலினுக்கு துணையாக நிற்கின்றனர்.
இதனால்தான் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்டாலின். மோடிக்கு எதிராக தேர்தல்களில் இரு முறை ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது நானே பயந்துவிட்டேன். ஆளுநரை பயமுறுத்தி, கலவரம் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது ஆளுநர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வில்லை என்றால், அவருக்கு எதிராக மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.