பல்டி அடித்த எடப்பாடி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.. கொடநாடு கொலை வழக்கில் சிக்குவது யார் ?

By Raghupati R  |  First Published Apr 29, 2022, 12:01 PM IST

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 வரை நடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார்.


பிறகு 2016ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தது. அப்போது அதே அமைச்சர் பதவிகளில் நீடித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார். அப்போதும் கட்சியின் மாவட்ட செயலாளராக நீடித்தார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் கடந்த 25ந் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் மனு வாங்கும் போதும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தார். அப்போது மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனையும், மாவட்ட செயலாளருக்கு மனு அளிக்க செய்தார். மாவட்ட செயலாளராக பழனிசாமி மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது நண்பரான இளங்கோவன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

2011 முதல் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த பழனிசாமி 11 ஆண்டுகளுக்கு பின் அந்த பதவியை விட்டு கொடுத்து இளங்கோவனுக்கு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் முடிவு குறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘2012ஆம் ஆண்டு முதல் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. 

அப்போது சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, தனது விசுவாசியான எடப்பாடியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து விட்டுச் சென்றார். பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்த்தது. அப்போது கட்சியிலும் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. 

இந்த சூழலில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. ஆனால் கொங்கு மண்டலத்தை தக்க வைத்துக் கொண்டது. மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்தது.ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி சென்றுவிடுவார். எனவே புறநகர் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு தான் என்று எதிர்பார்த்திருந்த எடப்பாடியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளது. இந்த விசாரணை வளையத்திற்குள் இளங்கோவனும் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுமட்டுமின்றி அவருக்கு தொடர் மிரட்டலும் வருவதாக தெரிகிறது. இதையொட்டியே புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டிருக்கலாம். கூடிய விரைவில் இளங்கோவன் விசாரணை வளையத்துக்குள் வருவார் என்று மேலிடத்தில் இருந்து வந்த தகவலால் தான் எடப்பாடி இந்த முடிவு எடுத்துள்ளார். கொடநாடு கொலை வழக்கில் சிக்காமல் இருக்க எடப்பாடி பழனிசாமி இப்படி செய்வார் என்று எதிர்பார்க்காத ஓபிஎஸ் தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாகவும்’ அதிமுகவினர் கூறுகின்றனர். 

இதையும் படிங்க : TASMAC : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் விடுமுறை..எப்போ தெரியுமா ?

click me!