#BREAKING திடீர் ராஜினாமா... ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த திமுக எம்எல்ஏ.. தலையில் அடித்து கொள்ளும் நாராயணசாமி..!

Published : Feb 21, 2021, 04:36 PM ISTUpdated : Feb 21, 2021, 04:38 PM IST
#BREAKING திடீர் ராஜினாமா... ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த திமுக எம்எல்ஏ.. தலையில் அடித்து கொள்ளும் நாராயணசாமி..!

சுருக்கம்

யாரும் எதிர்பாராத விதமாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. 

யாரும் எதிர்பாராத விதமாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ்  எம்.எல்.ஏ. தனவேலு கடந்தாண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் நாமச்சிவாயம்,  மல்லாடி கிருஷ்ணா ராவ் இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 10ஆக குறைந்தது. அதாவது 28 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 7 அதிமுகவுக்கு 4,  பாஜகவுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக ஆளுநரிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதையடுத்து நாளை சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில், இன்று ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால், நாராயணசாமிக்கு நெருக்கடி அதிகரித்தது. 

இந்நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வெங்கடேசன் அளித்தார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12ஆக குறைந்துள்ளது. இதனால், முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!