#BREAKING புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது... முதல்வர் நாராயணசாமி..!

By vinoth kumarFirst Published Feb 22, 2021, 10:26 AM IST
Highlights

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.

புதுச்சேரியில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து முதல்வர் நாராணநாமி பெருபான்மையை இழந்துவிட்டதாக எதிர்கள் ஆளுநரிடம் தனு அளித்திருந்தார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது  முதல்வர் நாராயணசாமி பேசி வருகிறார். புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற பணிகள் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். 4 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்த திட்டங்களை பணிகள் குறித்தும் முதல்வர் நாராணசாமி பேசி வருகிறார். 

மேலும் கொரோனா காலகட்டத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். காங்கிரஸ் அரசு கொரோனா பாலத்தில் சிறப்பாக செயல்பட்டு தொற்றை கட்டுப்படுத்தியது. மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கொரோனா பாலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்களுக்கு சேவையாற்றினர் என முதல்வர் கூறியுள்ளார்.

click me!