#BREAKING ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு... முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 11, 2021, 12:43 PM IST
Highlights

புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. இன்று 143 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை எனக்கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை முதலமைச்சர் ரங்கசாமி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். புதுச்சேரி அமைச்சரவை இலாகா பட்டியலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி ஜூலை 16ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்தார். 

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக புதுச்சேரியில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போது விருப்பமுள்ள 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும், பெற்றோர்களுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பலாம் உள்ளிட்ட நெறிமுறைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!