பொதுமக்களுக்கு குட்நியூஸ்... தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து இயக்கம்?

By vinoth kumarFirst Published Jul 29, 2020, 3:17 PM IST
Highlights

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, பாதிப்பு அதிகரித்தாலும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

இதனையடுத்து, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைப்படி முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், ஜூலை 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

click me!