துணிச்சலாக குரல் கொடுங்க... நடிகர் கார்த்தியை உசுப்பேற்றும் உதயநிதி ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2020, 2:28 PM IST
Highlights

கார்த்தி அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்

சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 குறித்து நடிகர் கார்த்தி பேசியதற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதநிதி ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உழவன் என்ற அமைப்பின் தலைவரும் பிரபல நடிகருமான கார்த்தி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில், மக்களின் கருத்துகளை கேட்காமல் பெருநிறுவனங்களின் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது. இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பது வளர்ச்சி அல்ல. வருங்கால சந்ததியினரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  இந்த சட்டத்தை இவ்வளவு அவசரமாக கொண்டுவரவேண்டியதன் அவசியம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார்

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘’விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டிருக்கும் நண்பர் கார்த்தி அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்’’ எனப்பாராட்டியுள்ளார். 

விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டிருக்கும் நண்பர் அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்

— Udhay (@Udhaystalin)

 

click me!