தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்.. பிடிஆர் டுவிட்டர், முகநூலில் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published May 11, 2023, 12:06 PM IST

அமைச்சர் உதயநிதி மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து நிதியமைச்சராக இருந்த பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டுவிட்டர் மற்றும் முகநூலில் பயோவை அப்டேட் செய்துள்ளார். 

அமைச்சர் உதயநிதி மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த பிடிஆர். எனது குரலை தவறாக எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். 

Latest Videos

இதையும் படிங்க;- நிதி அமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் மாற்றம்..! 4 மூத்த அமைச்சர்களின் இலாக்காவும் மாற்றி அறிவிப்பு

இந்நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதியமைச்சர் பதவி பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசுக்கு அந்த பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்தன. அதற்கு பதிலாக அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. 

அதன்படி, நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறையும், நிதியமைச்சராக தங்கம் தென்னரசுவும், தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜாவும்,  பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ், வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  நோ எதிரிகள்!! எடப்பாடி சிவனேனு இருக்காரு.. ஓபிஎஸ் எங்கே? ஸ்டாலினை புகழ்ந்து பேசிய துரைமுருகன்

இந்நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அவரது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என்று Bioவை அப்டேட் செய்துள்ளார். 

click me!