பக்கவான ஸ்கெட்ச்.. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சரியான ஆப்பு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

By vinoth kumarFirst Published Sep 16, 2021, 10:47 AM IST
Highlights

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021ம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 2011ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 90 கோடி அளவுக்கு சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் அவரது வீடு உள்ளிட்ட 28 இடங்களில்  இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், திருப்பத்தூரில் 15 இடங்களிலும்,  சென்னையில் 4 இடங்களிலும், பெங்களூரில் வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன. 

இதையடுத்து அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.28,78 கோடிக்கு 654 சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

click me!