அடகவுளே.. வருமானத்தை மீறி 654 சதவீதம் சொத்து சேர்த்த கே.சி வீரமணி.. முதல் தகவல் அறிக்கையில் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 10:09 AM IST
Highlights

திருப்பத்தூரில் உள்ள அவருக்கு சொந்தமான 15 இடங்களிலும், சென்னையில் 4 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது, ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி வீரமணியின் சகோதரர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது. மேலும் அவர் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் செய்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பத்தூரில் உள்ள அவருக்கு சொந்தமான 15 இடங்களிலும், சென்னையில் 4 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது, ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி வீரமணியின் சகோதரர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை, போளூர், நாற்றம்பள்ளி என அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் வேலூர் சத்துவாச்சாரி அருகே வசந்தம் நகரில் உள்ள கே.சி வீரமணி ஆதரவாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மற்றும் ஜோலார்பேட்டையில் உள்ள  கே.சி வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் சோதனை நடைபெறுகிறது. அவருக்கு சொந்தமான சாந்தோமில் உள்ள வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல கே.சி வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் துறை சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

click me!