நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளரும், இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கோ.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவிற்கு அதிகரிக்கும் ஆதரவு
பாஜக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளராக இருந்தவர் கோ .பிரகாஷ் , தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தநிலையில் கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கோ.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஈரோடு மாவட்ட செயலாளர்
இவர் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளரும், 2016, 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், மொடக்குறிச்சி நொகுதியில் அக்கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவருமா கோ. பிரகாஷ் மற்றும் அக்கட்சியின்
அதிர்ச்சியில் சீமான்
மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் திரு. தமிழன்பன், மொடக்குறிச்சி ஒன்றியப் பொறுப்பாளர் திரு. மயில்சாமி, அரச்சலூர் பேரூராட்சி செயலாளர் சிவானந்தன், தொகுதி இளைஞர் பாசறையைச் சேர்ந்த தங்கராசு உள்ளிட்டோரும்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, ஈரோடு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் துரை. நல்லசாமி அவர்களும் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது, ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.V. இராமலிங்கம், Ex. M.P., மொடக்குறிச்சி ஒன்றியக் கழகச் செயலாளர் R.P. கதிர்வேல் ஆகியோரும் உடன் இருந்தனர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
டிடிவி தினகரன் கூடாரத்தையே திட்டம் போட்டு காலி செய்யும் எடப்பாடி..! அதிர்ச்சியில் அமமுக நிர்வாகிகள்