உதயநிதிக்கு சிக்கல்.? பதறும் திமுக. சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்.

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2021, 11:40 AM IST
Highlights

திமுகவின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் படிவம் 26ல் குறிப்பிட்ட விவரத்திற்கும், சொத்து விவரத்திற்கும் பல வித்தியாசம் உள்ளது, 11.62 கோடி மதிப்புள்ள தேனாம்பேட்டை இல்லத்தை தான் வாங்கியதாகவும், snow pvt ltd கம்பெனி மூலம் அதை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு குறைவாக காண்பித்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சூர்ய நாராயணன் புகார் மனு அளித்துள்ளார். இது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் கடந்த 22 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் 4 ஆயிரத்து  450 வேட்பாளர்கள் களம் காண உள்ளனர்.234 தொகுதிகளுக்கு 7255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 6,183 ஆண் வேட்பு மனுக்களும்,1069 பெண் வேட்பு மனுக்களும், 3 வேட்பு மனுக்கள் திருநங்கைகள் அடங்குவர். 

இதில்  4450மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2741 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 370 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான  கால அவகாசமும்  முடிவுற்றதை யெடுத்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு  சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் உதயநிதி மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சூர்ய நாராயணன் புகார் மனு அளித்துள்ளார். அதாவது உதயநிதி ஸ்டாலின் தனது சொத்து மதிப்பை குறைவாக காண்பித்திருப்பதாகவும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்ய நாராயணன், திமுகவின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் படிவம் 26ல் குறிப்பிட்ட விவரத்திற்கும், சொத்து விவரத்திற்கும் பல வித்தியாசம் உள்ளது, 11.62 கோடி மதிப்புள்ள தேனாம்பேட்டை இல்லத்தை தான் வாங்கியதாகவும், snow pvt ltd கம்பெனி மூலம் அதை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மொத்த த்தில் தனது சொத்து மதிப்பை அவர் மிகவும் குறைத்து குறிப்பிட்டுள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய 
பிரதாசாஹூவிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவல் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!