உண்மையான அதிமுக தொண்டன் இரட்டை இலைக்குதான் வாக்களிப்பான்.. அமமுகவை அடித்து துவைத்த சைதை துரைசாமி.

Published : Mar 24, 2021, 11:14 AM IST
உண்மையான அதிமுக தொண்டன் இரட்டை இலைக்குதான் வாக்களிப்பான்.. அமமுகவை அடித்து துவைத்த சைதை துரைசாமி.

சுருக்கம்

10ஆண்டுகால ஆட்சியில் இருந்தவர்களுக்கு தான் சட்டியில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து அகப்பையில் எடுத்து கொடுக்க தெரியும் என முன்னாள் மேயரும் அதிமுக சைதை தொகுதி வேட்பாளருமான சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.  

10ஆண்டுகால ஆட்சியில் இருந்தவர்களுக்கு தான் சட்டியில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து அகப்பையில் எடுத்து கொடுக்க தெரியும் என முன்னாள் மேயரும் அதிமுக சைதை தொகுதி வேட்பாளருமான சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து அவர் இவ்வாறு கூறினார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக-திமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை அசோக் நகரில் உள்ள எல்.ஐ.சி காலனி, பள்ளிக்கூட சாலை உள்ளிட்ட பலபகுதிகளில் வாக்குகசேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்பொழுது, அதிமுக தேர்தல் அறிக்கை வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் கதாநாயகன் என்று கூறினார். இலவச வாஷிங்மெஷின் இல்லத்தரிசிகளுக்கு 1500ரூபாய், இளைஞர்களுக்கு கட்டனமில்ல போட்டி தேர்வு பயிற்சி உள்ளிட்டவற்றை தேர்தல் அறிக்கையில் அதிமுக வெளியிட்டுள்ளது என்றும், தற்போதய பொருளாதார நிலை, எதை எப்படி செய்வது உள்ளிட்டவை அதிமுகவுக்குதான் சரியாக தெரியம் என்று கூறிய அவர், சட்டியில் உள்ளவற்றை அகப்பையில் எடுத்து தர 10ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களுக்கு தான் தெரியும் என்றார். 

திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையை வில்லன் என்றும் கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு, ஆதாரபூர்வமான பதில் அளிக்க நேரம் பேதாது என்று தெரிவித்த அவர், அமமுகவினர் தங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறிவிட்டு அப்படியே போய்விட வேண்டியது தான் என்றார். உண்மையான அதிமுக தொண்டன் எம்.ஜி. ஆர் ஜெயலலிதா அவர்களை நேசிக்கும் தொண்டன் இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் இருப்பான் என்று அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?