மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யுங்க… மவுன விரதம் தொடங்கிய பிரியங்கா காந்தி

By manimegalai aFirst Published Oct 11, 2021, 8:21 PM IST
Highlights

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மவுன விரதத்தை தொடங்கி உள்ளார்.

லக்னோ: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மவுன விரதத்தை தொடங்கி உள்ளார்.

கடந்த 3ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் பாஜகவினர் சென்ற கார் மோதியதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியாகினர்.

விபத்தை ஏற்படுத்திய காரில் மத்தியி அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக சொல்லப்படுகிறது. இது பெரும் பதற்றத்தை உண்டு பண்ண ஆஷிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந் நிலையில் இந்த வன்முறை சம்பவத்தை முன்வைத்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மவுன விரதத்தை தொடங்கி உள்ளார். லக்னோவில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்தவாறு அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் மவுன விரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

click me!