வாக்கு எண்ணிய உடனே ரிசல்ட்… தேர்தல் ஆணையம் அதிரடி

Published : Oct 11, 2021, 07:34 PM IST
வாக்கு எண்ணிய உடனே ரிசல்ட்… தேர்தல் ஆணையம் அதிரடி

சுருக்கம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடித்த உடனே முடிவுகளை அறிவித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடித்த உடனே முடிவுகளை அறிவித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான 2 கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இரண்டு கட்ட தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து வாக்களித்தனர்.

வரும் 12ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந் நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முறையாக முடிந்த பின்னர், முடிவுகளை அறிவித்துவிட வேண்டும், உரிய அடையாள அட்டையின்றி யாரும் வாக்கு எண்ணும் மையங்களில் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!