ரகிட, ரகிட… இலவச கொரோனா தடுப்பூசி தான் பெட்ரோல் விலை உயர காரணம்.. மத்திய அமைச்சர் ‘கலகல’….

Published : Oct 11, 2021, 06:53 PM IST
ரகிட, ரகிட… இலவச கொரோனா தடுப்பூசி தான் பெட்ரோல் விலை உயர காரணம்.. மத்திய அமைச்சர் ‘கலகல’….

சுருக்கம்

இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தெலி கூறி இருக்கிறார்.

இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தெலி கூறி இருக்கிறார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது. டீசல் விலையும் 100ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. தொடரும் எரிபொருள் விலையால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக தரப்படுவதால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி கூறி இருக்கிறார்.

அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்து இருக்கின்றன. நீங்கள் அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்கிறீர்கள். அதற்கு பணம் எங்கிருந்து வருகிறது. இதுபோன்று விலை உயர்த்தப்படுவதால் வரும் வரிகளில் இருந்து கிடைக்கிறது.

130 கோடி மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். இந்த தடுப்பூசியின் விலை 1200 ரூபாய். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 40. மற்றவை அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் தான் என்று பேசி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!