மாலை போட்ட சீமானால் காமராஜருக்கு தீட்டு… கழுவி அலம்பல் பண்ணிய காங்கிரஸ்….

Published : Oct 11, 2021, 06:23 PM IST
மாலை போட்ட சீமானால் காமராஜருக்கு தீட்டு… கழுவி அலம்பல் பண்ணிய காங்கிரஸ்….

சுருக்கம்

காமராஜர் சிலைக்கு மாலை போட்ட சீமானால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறி சிலையை காங்கிரஸ் கட்சியினர் கழுவியது சர்ச்சையாகி உள்ளது.

காமராஜர் சிலைக்கு மாலை போட்ட சீமானால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாக கூறி சிலையை காங்கிரஸ் கட்சியினர் கழுவியது சர்ச்சையாகி உள்ளது.

கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்துவதை கண்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின்ர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக தக்கலை பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒரு காரியம் பண்ணி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சிலைக்கு சீமான் செலுத்திய மாலையை தூக்கி எறிந்துள்ளனர்.

இதுபோதாது என்று சிலையை சுத்தம் செய்து பாலாபிஷகம் செய்து இருக்கின்றனர். பிரிவினைவாதத்தை தூண்டும் சீமான் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்ததை ஏற்க மாட்டோம், நாங்கள் தெய்வமாக வணங்கும் தலைவர் காமராஜர் உருவ சிலையை தொட்டு தீட்டு படுத்தியதாக கூறி உள்ளனர்.

அதனால் தான் மனம் வெதும்பி அந்த சிலையை சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்து இருக்கின்றோம், மாலை அணிவித்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!