பாஜக-விடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்… உச்சநீதிமன்ற்ம, ஜனாதிபதியிடம் கதறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

Published : Oct 11, 2021, 05:56 PM IST
பாஜக-விடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்… உச்சநீதிமன்ற்ம, ஜனாதிபதியிடம் கதறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

சுருக்கம்

பா.ஜ.க.-வினர் அரச பயங்கரவாதத்திய நிகழ்த்தி வருகின்றனர். தலித்துகள், விவசாயிகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

பா.ஜ.க.-வினர் அரச பயங்கரவாதத்திய நிகழ்த்தி வருகின்றனர். தலித்துகள், விவசாயிகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நாடு முழுவதும் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகை, மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை தலைமையில் அக்கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, பாஜக நாடு முழுவதும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் கூறினார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவரிடம் ராகுல்காந்தி முறையிடவுள்ளார்.

விவசாயிகள் படுகொலை குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். பா.ஜ.க-விடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!