ஆக்சிஜன் ஜெனரேட்டர் வசதி இருந்தால்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை.

Published : Jul 12, 2021, 09:59 AM IST
ஆக்சிஜன் ஜெனரேட்டர் வசதி இருந்தால்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை.

சுருக்கம்

ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி ஒதுக்கீடு செய்தும், 25% தடுப்பூசிகளை தனியாருக்கு தான் வழங்குவேன் என ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். ஆனால் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால் 10 சதவீதம் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கும், மாநில அரசாங்கத்திற்கு 90% தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்,

100க்கும் மேற்பட்ட படுக்கைகளை கொண்ட தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் இருந்தால் தான் மருத்துவமனைகளுக்கு இனி அனுமதி வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.பின்பு மேடையில் பேசியதாவது:- எதிர்காலத்தில் மூன்றாவது அலை வரக்கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி வந்தாலும் ஏற்கனவே இருந்ததை போல் தனியார் மருத்துவமனைகளில் கட்டமைப்பு என்பது இல்லாமலேயே போய் விட்டால் அதே போன்றதொரு நிலையில் வைத்துக் கொண்டு இருந்தால் அது திரும்பவும் நமக்கு ஒரு பெரிய அளவிலான பாதிப்பைத் தரக் கூடும். 

அதனால்  நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பது அவசியமான ஒன்று. மே 7-ஆம் தேதி 730 மெட்ரிக் டன்னாக இருந்த தினசரி ஆக்சிஜன் கையிருப்பு இன்று ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். எல்லா தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திக் கொள்வது என்பது அவசியமான ஒன்று என்றும் அவர் கூறினார். தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கு பட்சத்தில் அதற்கு தேவையான ஆக்ஸிஜன் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே அந்த மருத்துவமனைக்கான அனுமதியை வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு நிலை எதிர்காலத்தில் ஏற்படுத்துப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி ஒதுக்கீடு செய்தும், 25% தடுப்பூசிகளை தனியாருக்கு தான் வழங்குவேன் என ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். ஆனால் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால் 10 சதவீதம் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கும், மாநில அரசாங்கத்திற்கு 90% தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை வைத்துள்ளோம், ஆனால் இதுவரை ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பணத்தைவிட தற்போது பொது மக்களை கொரோனாவிலிருந்து  முழுமையாக  பாதுகாப்பது நம்முடைய கடமை என்றும் அவர் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!