உலகின் அதிக விலையுயர்ந்த காருக்கு புது ரோடு கேட்ட நடிகரின் தாயார்... அண்டாவில் அழைத்து வந்த வீரர்கள்!

By sathish kFirst Published Aug 20, 2018, 11:06 AM IST
Highlights

பிருத்விராஜின் பங்களாவை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. பங்களாவுக்குள்ளும் தண்ணீர் புகுந்த நிலையில் அருகிலிருந்தோர் பங்களாவில் தங்கியிருந்த மல்லிகாவை சிறிய பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர். 

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த 8ஆம் தேதியிலிருந்து அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள எல்லா அணைகளும் நிரம்பி வழிகின்றன. பெருமழையால் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக வெளுத்து வாங்கிய பெருமழையால், 14 மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்தப் பெருமழைக்கு இதுவரை 368 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 

இந்தநிலையில் பிருத்விராஜின் பங்களாவை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. பங்களாவுக்குள்ளும் தண்ணீர் புகுந்த நிலையில் அருகிலிருந்தோர் பங்களாவில் தங்கியிருந்த மல்லிகாவை மிதவை மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர்.

இவர், கடந்த இரண்டு ஆண்களுக்கு முன்பு PWD துறை அமைச்சரிடம் "விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவு க்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள் என்று கூறி மனு ஒன்று கொடுத்தார்.

உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை மல்லிகா அண்டாவில் அமர்ந்து பயணிப்பது சமூகத்திற்கு இறைவன் தருகிற மகத்தான படிப்பினையாகும். கேரளாவை சூழ்ந்த வெள்ளம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்கவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.

click me!