வெற்றி வேல்.. வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்கிய பிரதமர் மோடி...!

By vinoth kumarFirst Published Feb 25, 2021, 6:11 PM IST
Highlights

ஆகச்சிறந்த சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகளை உருவாக்கியது கொங்கு மண் என பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். 

ஆகச்சிறந்த சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகளை உருவாக்கியது கொங்கு மண் என பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். 

கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் வெற்றிவேல் வீரவேல் என பிரதமர் மோடி முழக்கங்களை எழுப்பி தேர்தல் பரப்புரையை தொடங்கினார். வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர் என தமிழில் பேசினார். தமிழக மக்களின் கண்ணிய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். 

இந்தாண்டு தமிழகம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது. கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு உதாரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி திகழ்கிறது. வளர்ச்சியை மையப்படுத்தும் அரசு மட்டும் வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர். வளர்ச்சிக்கு எதிரானவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர். 

மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் அதிகளவில் பயன். சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெரிய முதலீடுகளுக்கான ஜவுளிப் பூங்கா திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமையான ஜவுளித்துறையை கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது மத்திய அரசு. சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருடன் நான் இருக்கிறேன் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் வரும் என உறுதி அளிக்கிறேன். 11 கோடி விவசாயிகள் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். கொப்பறை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

click me!