புதிய அனல்மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 % மின்சாரம் தமிழகத்திற்கே வழங்கப்படும்- மோடி அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2021, 5:25 PM IST
Highlights

தனிநபர் கண்ணியத்தை உறுதிசெய்வது வளர்ச்சியை அடிப்படையாகும், நம் மக்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளை நனவாக்கும் வகையில் பிரதமர் வீட்டுவசதி வாரிய திட்டம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்,  மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சுமார் 332 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 144 வீடுகள் திறந்து வைப்பதில் உவகை அடைகிறேன் 

கோவை வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த தொழில் நகரம் புதுமைகள் படைக்கும் நகரம், கோயம்புத்தூருக்கு ஏன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வழங்கி இருக்கிறோம். பவானிசாகர் அணையை விரிவுபடுத்தி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு நீர் பாசனம் அளிக்க உதவும்,  ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நல்ல பலனைத் தரும். இது விவசாயிகளுக்கு  பேருதவியாக இருக்கும், இந்நேரத்தில் திருவள்ளுவரின் குரல் எனக்கு நினைவுக்கு வருகிறது, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றவரெல்லாம் பின் தொடர்ந்து செல்வர், இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. 

தொழில்துறை வளர்ச்சியின் அடிப்படை தேவைக்கு, தடையில்லா மின்சாரமே முக்கியம், இந்நிலையல் முக்கிய இரண்டு மின் திட்டங்களை நாட்டுக்கு அற்பணித்ததிலும் ஒரு புதிய மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு இருப்பதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுமார் 709 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ளது. மேலும்  நம் நாட்டுக்கு பெரும் நன்மை பயக்கும் வகையில் நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு புதிய அனல் மின் திட்டம் சுமார் 2800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில் 65% அதிகமான மின்சாரம் தமிழ்நாட்டுக்கே வழங்கப்படும். 

நண்பர்களே கடல் வணிகம் மற்றும் துறைமுகம்சார் வளர்ச்சி திட்டத்தில் தமிழகம் மிகச்சிறந்த  வரலாற்றைக் கொண்டது. தமிழ்நாடு வ.உ சிதம்பரனார்  துறைமுகத்தின் விரிவாக்க திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  துடிப்பு நிறைந்த இந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த வணிகத்தில் அவரது பார்வை நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும்.  இந்தியாவிலுள்ள கிழக்கு கடற்கரையில்  உள்ள துறைமுகங்களில் வாஉசி துறைமுகத்தை அதிக  சரக்குகளை கையாளும் துறைமுகமாக மாற்றுவோம். 
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஆறு லட்சத்து 500 கோடி செலவில் சுமார் 700க்கும் அதிகமான  திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியும், சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, வாவுசி துறைமுகத்தில் ஏற்கனவே 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மேற்கூரை திட்டம் செய்யப்பட்டுள்ளது, சுமார் 20 கோடி ரூபாய் செலவில் தரைதள சூரிய சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அத்துறைமுகத்துக்கு தேவையான மின் தேவையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்யும், இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. 

தனிநபர் கண்ணியத்தை உறுதிசெய்வது வளர்ச்சியை அடிப்படையாகும், நம் மக்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளை நனவாக்கும் வகையில் பிரதமர் வீட்டுவசதி வாரிய திட்டம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்,  மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சுமார் 332 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 144 வீடுகள் திறந்து வைப்பதில் உவகை அடைகிறேன்.  சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு காலம் நிறைவடைந்த பின்னரும் குடியிருக்க வீடே இல்லாதவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அன்பிற்குரியவர்களே... தமிழ்நாடு அதிக நகர் மாயமான மாநிலமாகும்,  நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து மத்திய அரசும், மாநில அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுக்கும், வாழ்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக  இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். வீடு பெறும் அனைத்து குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!