வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோபைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. சீனா, பாகிஸ்தான் அலறல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2021, 12:37 PM IST
Highlights

அதில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 100 சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி அதில் வலியுறுத்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் முதல்முறையாக அவரை சந்தித்து பேச உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாஷிங்டனில் 24ஆம் தேதி நடைபெற உள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நெருக்கம் காட்டி வருகிறது. பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் நம் பிரதமர் நட்பு பாராட்டி வந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வரும் நிலையில் பல்வேறு நேரங்களில் இரு தலைவர்களும் தொலைபேசியில் மட்டுமே உரையாடி வந்தனர். இந்நிலையில் வரும் 24ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ஜோ பிடனை பிதமர் மோடி நேரில் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து குவாட் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் சீனாவுக்கு எதிராக இந்த அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. 

இந்நிலையில் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் வாஷிங்டனில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் உலக அளவில் சர்வதேச நாடுகள் சந்தித்து வரும் பிரச்சினைகள், இந்தோ பசுபிக் விவகாரம், தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் அமெரிக்கா புறப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய வெளியூர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 24ஆம் தேதி அமெரிக்க அதிபரை சந்தித்து பேசும் பிரதமர், குவாட் கூட்டமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோசிஹிடே சுகா ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அதேபோல தென் சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம், ஆப்கன் விவகாரம், அதிகரித்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் குவாட் நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு கூட்டாண்மை, கடல்சார் பாதுகாப்பு, கல்வி, பருவநிலை மாற்றம் என பல்வேறு விஷயங்கற் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாறிக் கொள்ள உள்ளனர். அதிபர் ஜோபைடன் உடன் இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்தும் ஆப்கனிஸ்தான் நிலவரம் குறித்தும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் குவாட் மாநாட்டை அடுத்து 25ஆம் தேதி ஐநா பொதுச்சபை 76 அமர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 100 சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி அதில் வலியுறுத்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி ஜோபைடன் சந்திக்க உள்ளது, இந்தியாவின் எதிரி நாடுகளான, சீனா பாகிஸ்தானுக்கு கலக்கத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்க செய்துள்ளது. 
 

click me!