ராமதாஸ் போட்ட ஒரே ட்வீட்... மிரண்டு அரண்டு போன அதிமுக..!

By vinoth kumarFirst Published Sep 21, 2021, 12:25 PM IST
Highlights

 உள்ளாட்சி தேர்தல் முடிவு என்பது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாமக தலைவர்கள் எடுத்த முடிவு. புரிந்ததா என்ற கோணத்தில் அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவினர் மீண்டும் கூட்டணிக்கு வாருங்கள் என்று ரகசியமாக அழைப்பு விடுப்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்து. 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்று இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்தது. அந்த தேர்தலில் கணிசமான அளவில் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் மட்டும் அல்லாமல் ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்கள் பதவிகளை பாமக கைப்பற்றியது.

இந்த சூழலில் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி நீடிக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் திடீரென கடந்த வாரம் செவ்வாய்கிழமை, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக, தனித்து போட்டி என்று அறிவித்தது. ஆனால் மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாகவும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துபோட்டி என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்திற்கு பிறகு பாமகவிற்கு எதிரான விமர்சனத்தை அதிமுக நிறுத்திக் கொண்டது. இப்படியான நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாமக விரும்புவதாக கூறி அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் என்பதையும் தாண்டி, நடைப்பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது- 

pic.twitter.com/nfvrYOAYui

— Dr S RAMADOSS (@drramadoss)

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ‘LOCAL- UNDER- STANDING’என்று பதிவிட்டு அதனை அழித்துள்ளார். மேலும், UNDERSTAND. புரிஞ்சுதா என்றும் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு புதிய பிரச்னையை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவு என்பது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாமக தலைவர்கள் எடுத்த முடிவு. புரிந்ததா என்ற கோணத்தில் அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவினர் மீண்டும் கூட்டணிக்கு வாருங்கள் என்று ரகசியமாக அழைப்பு விடுப்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. திரும்ப, திரும்ப அழைக்க வேண்டாம் என்ற விதத்தில் இதனை பதிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

click me!