அடிதூள்.. ஏழைகளை குளிரவைக்கும் முக்கிய அறிவிப்பு.. அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2021, 12:00 PM IST
Highlights

அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடன் ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 100 மானியம் வழங்கப்படும் பொன்ற அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், அதை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கும் நிலையில் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு அரசு கவனம் செலுத்தி வருகிறது

.

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டத்தை  செயல்படுத்துவதற்கான குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடன் ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 100 மானியம் வழங்கப்படும் பொன்ற அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், அதை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கும் நிலையில் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கவும் பிரதமமந்திரி திட்டத்தை உடனே செயல்படுத்தவும், 6 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைக்கு ஏற்கனவே மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை உடனே அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரியின் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் கோபால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் குழுவின் தலைவராக ஊராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர், உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனரும் இருப்பார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசு ஆணை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

click me!