பிரதமர் படத்தை மார்ஃப்பிங் செய்து அவதூறு.. கொந்தளித்த பாஜக தொண்டர்கள்.. யூடியூப் சேனலுக்கு ஆப்பு.??

Published : Aug 30, 2021, 01:58 PM IST
பிரதமர் படத்தை மார்ஃப்பிங் செய்து அவதூறு.. கொந்தளித்த பாஜக தொண்டர்கள்.. யூடியூப் சேனலுக்கு ஆப்பு.??

சுருக்கம்

பாஜக உருவாக்கிய  பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்  என்ற திட்டத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர்களை கற்பழிப்பாளர்கள் என குறிப்பிடும் வகையில் பல்வேறு வகையில் கமெண்டுகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியையும் இணைத்து ஆபாசமாக புகைப்படம் வெளியிட்டு, அதை வைராக்கிய யூடியூப் பக்கத்தை முடக்க வேண்டும் என வலியுறுத்து பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த யூடியூப் பின்னணியில் சில முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பாஜக வழக்கறிஞர் அணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். செல்போன், ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப்போன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இணைய தள குற்றங்களில் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் நலனுக்காக பயன்படுத்தவேண்டிய சமூக வலைதளங்கள் வதந்தி, ஆபாசம்  பரப்பும் ஆபத்து நிறைந்தவையாக மாறிவருகிறது. 

இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், இந்த வகை குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இன்று காலை சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி  ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து ஆபாசமாக அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த புகாருக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால்கனகராஜ், கடந்த 6ஆம் தேதி மாடர்ன் டைம் என்ற யூடியூப் சேனல் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்மிருதி இரனியை இணைத்து ஆபாசமாக புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இழி செயல் நாட்டின் பிரதமரையும், அமைச்சரிடம் கலங்கப்படுத்தும் வாயில் உள்ளது.

எனவே அந்த யூடியூப் சேனல் மற்றும் அதை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வதுடன், அந்த யூடியூப் பக்கத்தையும் முடக்க வேண்டும் என்றும், சேனலுக்கு பின்னணியில் முக்கிய புள்ளிகளில் தூண்டுதல் உள்ளது எனவும் சந்தேகம் எழுப்பிய பால்கனகராஜ், பாஜக உருவாக்கிய  பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்  என்ற திட்டத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக தலைவர்களை கற்பழிப்பாளர்கள் என குறிப்பிடும் வகையில் பல்வேறு வகையில் கமெண்டுகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாஜக ஆட்சியின் சிறப்பை சீர்குலைக்கும் வகையில், பாஜக ஆட்சி குறித்து தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையில் அந்த யூடியூப் செயல்பாடுகள் உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற அவதூறு செயலில் ஈடுபட்டுள்ளார் modern time என்ற யூட்யூப் பக்கத்தை முடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும,  இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!