ஜனாதிபதி தேர்தலில் ராம் நாத் கோவிந்த் நாளை வேட்புமனு தாக்கல்... - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு...

First Published Jun 22, 2017, 5:38 PM IST
Highlights
Presidential election 2017 Ram Nath Kovind to file nomination tomorrow 20 CMs to remain present says report


ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாளை(23-ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிகழ்வின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தெலங்கானாமுதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ேதர்தல்

ஜூலை 24-ந் தேதியோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வௌியிட்டது. அதன்படி, கடந்த 14-ந் தேதி முதல் வரும் 28ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கலும், 30-ந் தேதி மனு பரிசீலனையும் நடக்க உள்ளது.

தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஜூலை 17-ந் தேதி தேர்தலும், 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

எதிர்பார்ப்பு

பா.ஜனதா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதன்பின்பே, எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிப்படும் என்று கூறப்பட்டது. 

பீகார் ஆளுநர்

அதற்கு ஏற்றார்போல், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், பீகார்ஆளுநரான ராம் நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த பா.ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இதையடுத்து, பீகார் ஆளுநர் பதவியை ராம் நாத் கோவிந்த் ராஜினாமா செய்தார். 

ஆதரவு

ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டதும், அவருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும், முதல்வர்  எடப்பாடி  பழனிச்சாமியும்  ராம்நாத்  கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல்

இந்நிலையில் பா.ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாளை(23ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இந்த வேட்புமனுத் தாக்கலின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர் உடன் இருப்பார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

காலை பயணம்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் இருந்து வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இன்று காலை புறப்பட்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடி

மேலும், தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்த வேட்புமனுத் தாக்கலின் போது உடன் இருக்க  மத்தியஅமைச்சர்வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளதாகச் செய்திகள் ெதரிவிக்கின்றன. இதனால், மற்ற மாநில முதல்வர்களும் வர வாய்ப்புள்ளது.

இது தவிர பிரதமர் நரேந்திர மோடி, அவரின்அமைச்சரவை அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிபவர்களாகவும், வழிமொழிபவர்களாவும்இருப்பார்கள்.

 

click me!