காணாமல் போன காவல் தெய்வங்கள் – வலை வீசி தேடும் அதிமுகவினர்!!

 
Published : Jun 22, 2017, 04:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
காணாமல் போன காவல் தெய்வங்கள் – வலை வீசி தேடும் அதிமுகவினர்!!

சுருக்கம்

admk cadres searching for saraswathi gokula indra

அதிமுகவில் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருந்த மூன்று பெண் பிரபலங்களை காணவில்லை என்று அதிமுகவினர் தேடி வருகின்றனர்.

அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சக்தி வாய்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா.

கைத்தறி துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சகாயத்துடன் சாதாரண விசயத்தில் மோதல் போக்கு ஏற்பட்டு இடமாற்றம் செய்ய வைத்தார்.கட்சியில் மத்திய சென்னையில் பவர்புல் அமைச்சராக வலம் வந்தார்.

இதே போல் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பா.வளர்மதி.கட்சியில் மாவட்ட செயலாளருக்கு இணையாக கோஷ்டி அரசியல் நடத்தியவர்.தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு கட்சிக்குள் செல்வாக்காக வலம் வந்து கொண்டிருந்தவர்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து வீட்டில் இருந்த காலகட்டத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற போது இவர்கள் இருவரின் அழுகாச்சி நாடகம் உலக பிரசித்தி பெற்றது.

அதே காலகட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அன்று கதறி அழுதபடி கேக் வெட்டி இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டது கட்சியினரையே மிரள வைத்தது.

இவர்களுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல சி.ஆர்.சரஸ்வதி. மதிமுகவிலிருந்து தாமதமாக அதிமுகவுக்கு வந்ததாலோ என்னவோ இவருக்கு முக்கிய பதவி கிடைக்க தாமதமானது.ஆனாலும் சமூக நல வாரிய தலைவராகவும் அதிமுக தலைமை கழக பேச்சாளராகவும் பின்னர் செய்தி தொடர்பாளராகவும் செல்வாக்காக இருந்தார்.

ஆனால் இவர்கள் மூவரும் கீழ்மட்ட அணி தொண்டர்களை அலட்சியம் செய்ததாலும் மக்களோடு தொடர்பில் இல்லாததாலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூவரும் தோல்வியை தழுவினர்.

பல்லாவரத்தில் முதன்முறையாக அதிமுக வேட்பளாராக நிறுத்தப்பட்ட சரஸ்வதி தோல்வி அடைந்தார்.
தங்களது சொந்த தொகுதியனா அண்ணாநகர், ஆயிரம் விளக்கில் எந்த வித மக்கள் பணியையும் அமைச்சர்களாக இருந்தும் நிறைவேற்றாத காரணத்தால் கோகுல இந்திராவும் வளர்மதியும் படுதோல்வி அடைந்தனர்.

அதன் பின்னர் கட்சி கூட்டங்களில் ஆங்காங்கே தலை காட்டி வந்த இவர்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது தொடர்ந்து தொலைகாட்சிகளை தோன்றி பேட்டி அளித்து கொண்டிருந்தனர்.

ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த இவர்கள் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டனர்.

 

இது குறித்து சில அதிமுக தொண்டர்களிடம் கோகுல இந்திரா வளர்மதி சிஆர் சரஸ்வதி எங்கும் தலைகாட்டுவதில்லையே என்று கேட்டபோது அட ஆமாம் தலைவா எங்கே போனார்கள் இவர்கள் மூன்று பேரும் என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர்.

தொண்டர்களே மறந்து போகும அளவுக்கு இந்த 3 பெண் பிரபலங்கள் ஒரு காலத்தில் அதிமுகவின் காவல் தெய்வங்கள் போல் சென்னையில் உலா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு