ஓபிஎஸ்-இபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பு..??? நட்சத்திர ஓட்டலில் தடபுடல் ஏற்பாடு.. நாளை நடக்கப் போகும் டுவிஸ்ட்..

By Ajmal Khan  |  First Published Jul 1, 2022, 2:26 PM IST

ஒற்றை தலைமை விவகாரத்தில்  ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள நிகழ்சி ஒன்றில் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


ஒற்றை தலைமை பிரச்சனையால் பரபரப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு  ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. எனவே ஓபிஎஸ் தற்போது அதிமுக பொருளாளர் பதவியில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று ஓபிஎஸ் டெல்லி சென்றார். அதே போல இபிஎஸ் தரப்பில் தம்பிதுரை கலந்து கொண்டார்.

Tap to resize

Latest Videos

கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு

தற்போது ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவு பட்ட நிலையில், நாளை சென்னை வரவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவை ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இணைந்து சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்மும்,  எதிர்த்து எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். நேற்று யஷ்வந்த் சின்கா சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய நிலையில்,  பா.ஜனதா வேட்பாளர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருகிறார்.

திமுகவிற்கு குட்பாய்? மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்..?

ஓபிஎஸ்-இபிஎஸ் ஒன்றாக சந்திக்க திட்டம்?

சென்னை கிண்டியில் உள்ள  தனியார் நட்சத்திர விடுதியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார். தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆதரவு திரட்டுகிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், சென்னை வரும் திரௌபதி முர்முவை இருவரும் சேர்ந்து சந்திப்பார்களா? அல்லது தனி தனியே சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பி.எஸ் தரப்பில் விசாரித்த போது அனைவருடனும் சேர்ந்து சந்திக்க தயாராகவே உள்ளதாக தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.பி.எஸ் தரப்புடன் இணைந்து சந்திப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையை குடியரசு தலைவர் வரை கொண்டு செல்ல வேண்டுமா? என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு நாளை ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பும் சந்தித்து கொள்ள இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

சொந்த தொகுதியிலேயே எடுபடாத ஓபிஎஸ்..! எடப்பாடிக்கு எதிராக 7 நிமிடத்தில் முடிந்த போராட்டம்

click me!