
சமூக வலைதளத்தில் தனது பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி மாற்றியுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருந்ததை தலைமை நிலைய செயலாளர் என எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் . அதே சமயம் இரட்டை தலைமை என்பதே போதுமானது என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 23ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதி ஆகிவிட்டதாக சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு.. ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்..!
இதையும் படிங்க;- உள்ளாட்சி இடைத்தேர்தல்.. கையெழுத்து போட நான் ரெடி.. நீங்க ரெடியா? ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த இபிஎஸ்..!
இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அவர் கட்சியின் பொருளாளர் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கைகளிலும் அவர் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று எடப்பாடி எழுதிய கடிதத்தில் கூட, கடந்த 23-ம் தேதி கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது.
இதையும் படிங்க;- இருக்கிற பிரச்சினையில இது வேற.. தொடர்ந்து தொல்லை கொடுக்கும் புகழேந்தி.. கடுப்பாகும் எடப்பாடியார்..!
எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், இபிஎஸ் தன்னை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்றே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார்.