குடியரசுத் தலைவருக்கு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.. எய்ம்ஸ்க்கு மாற்ற பரிந்துரை..!

By vinoth kumarFirst Published Mar 27, 2021, 4:16 PM IST
Highlights

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மேல் சிகிச்கைக்கு  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குடியரசுத் தலைவர் இன்று காலை லேசான நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி ராணுவ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வங்கதேசத்துக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நலக் குறைவு குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராம்நாத் கோவிந்தின் மகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில், ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்;-  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளது. மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!