ஈபிஎஸ் பிரச்சாரம் சக்சஸ்! கருத்து கணிப்பில் முந்தும் அ.தி.மு.க

By Asianet TamilFirst Published Mar 27, 2021, 4:01 PM IST
Highlights

முதலமைச்சரின் சூறாவளி பிரச்சாரம் மற்றும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ஆகியவை மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றதன் காரணமாக கருத்து கணிப்பு முடிவுகளில் அ.தி.மு.க கூட்டணி முந்தைய நிலையை விட கூடுதல் இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. 

முதலமைச்சரின் சூறாவளி பிரச்சாரம் மற்றும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை ஆகியவை மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றதன் காரணமாக கருத்து கணிப்பு முடிவுகளில் அ.தி.மு.க கூட்டணி முந்தைய நிலையை விட கூடுதல் இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது குறித்த கருத்து கணிப்புகளை டெமாக்ரஸி நெட்வர்க் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க கூட்டணி 122 இடங்களிலிம் தி.மு.க கூட்டணி 111 இடங்களிலும் அ.ம.மு.க ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு அதனை மக்களிடத்தில் சென்று சேரும் வகையில் தலைவர்கள் பிரச்சாரங்களும் மேற்கொண்டு வருகின்றனர். கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் மக்களிடத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிய டெமாக்ரஸி நெட்வர்க் மார்ச் 20 முதல் மார்ச் 25ம் தேதி வரை மீண்டும் கள ஆய்வு மேற்கொண்டது.

இதில், அ.தி.மு.க கூட்டணி 129 இடங்களும் தி.மு.க கூட்டணி 105 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பை விட அ.தி.மு.க கூட்டணி கூடுதலாக 7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, தி.மு.க கூட்டணிக்கு 6 தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சூறாவளி பிரச்சாரம், அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மற்றும் “தொடரட்டும் வெற்றி நடை என்றென்றும் இரட்டை இலை” என்ற விளம்பர தொடர்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தந்துள்ளது இந்த கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

click me!